வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம்: இம்பேக்ட் வீரர் விருதை வென்ற குல்தீப் யாதவ்


வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம்: இம்பேக்ட் வீரர் விருதை வென்ற குல்தீப் யாதவ்
x

வங்காளதேசத்துக்கு எதிரான சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் மோதின. இதில் டாஸ் ஜெயித்த வங்காளதேச பொறுப்பு கேப்டன் ஜேக்கர் அலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 75 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரிசாத் ஹூசைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து 169 ரன் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 19.3 ஓவர்களில் 127 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சைப் ஹசன் 69 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

முன்னதாக ஆசிய கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு அணி நிர்வாகம் சார்பில் ‘இம்பேக்ட் வீரர்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அதன்படி இந்த போட்டியின் இம்பேக்ட் வீரராக 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 More update

Next Story