லக்னோவுக்கு எதிரான ஆட்டம்: மும்பை அணியில் ரோகித் இடம்பெறவில்லை.. காரணம் என்ன..?


லக்னோவுக்கு எதிரான ஆட்டம்: மும்பை அணியில் ரோகித் இடம்பெறவில்லை.. காரணம் என்ன..?
x

image courtesy:PTI

தினத்தந்தி 4 April 2025 7:26 PM IST (Updated: 4 April 2025 8:33 PM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் லக்னோ - மும்பை அணிகள் விளையாடுகின்றன.

லக்னோ,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த ஆட்டத்திற்கான மும்பை அணியில் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. இதற்கான காரணம் குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், "நேற்றைய பயிற்சியின்போது மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை" என்று கூறினார்.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

மும்பை: வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், ராஜ் பாவா, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், அஸ்வனி குமார், விக்னேஷ் புதூர், டிரெண்ட் போல்ட்

லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாகூர், திக்வேஷ் சிங் ரதி, ஆகாஷ் தீப், அவேஷ் கான்


1 More update

Next Story