

சென்னை,
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்சர் படேலும் அணியில் இடம் பிடித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். சாம்சன் அதிரடியுடன் விளையாடி 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இந்திய அணி தற்போது வரை 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.