மாறுவேடத்தில் தி நகரில் ஷாப்பிங் செய்த ஹைடன்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தி நகரில் மாறுவேடத்தில் ஷாப்பிங் செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
மாறுவேடத்தில் தி நகரில் ஷாப்பிங் செய்த ஹைடன்
Published on

சென்னை,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஹைடன். 6 அடிக்கும் மேலான உயரத்துடன் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஹைடன் களத்தில் வேகப்பந்து வீச்சை முன்னேறி வந்து எதிர்கொள்ளும் காட்சிகள் பந்து வீச்சாளர்களை கதிகலங்கச் செய்யும். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற பிறகு, ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார்.

3 தொடர்களில் சென்னை அணிக்காக ஹைடன் விளையாடியுள்ளார். கிரிக்கெட் வர்ணணை பணியில் ஈடுபட்டுள்ள ஹைடன், ஐபிஎல் போட்டிகளின் போது சென்னைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில், சென்னையில் உள்ள தி நகரில் மாறுவேடத்தில் ஹைடன் ஷாப்பிங் செய்த புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அடையாளம் காணாதபடி, முகத்தில் பெரிய மீசை, தாடியை ஒட்டிக்கொண்டு ஹைடன், தி நகரில் உள்ள சாலையோர கடைகளில் ஷாப்பிங் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இப்படி மாறுவேடத்தில் சென்றது எதற்காக என்பது குறித்து ஹைடன், ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஆஸ்திரேலியே அணியின் மற்றொரு முன்னாள் வீரர் வார்னே உடன் மேற்கொண்ட சவாலை நிறைவேற்றுவதற்காகவே இப்படி மாறுவேடத்தில் சென்றதாகக் கூறியுள்ளார்.

View this post on Instagram

Bit of undercover shopping at T Nagar Street Mall in Chennai @starsportsindia @iplt20 @chennaiipl

A post shared by Matthew Hayden (@haydos359) on

``1,000 ரூபாய்க்கு குறைவாக பொருள்களை வாங்க முடியாது என வார்னே சவால் விட்டார். அதனாலேயே இப்படிச் சென்றேன். தி.நகரில் லுங்கி, சட்டை, வாட்ச் உள்ளிட்ட பொருள்களை வாங்கினேன். எனக்கு ஒரு உள்ளூர் பையன் ஒருவன் உதவி புரிந்தான். அவனுக்கு 100 ரூபாய் கொடுத்தேன். இப்போது பெருமையாகச் சொல்வேன் சவாலில் நான் வெற்றி என்று" என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com