2 ஆண்டுகளுக்கு முன்பு அசைவ உணவை கைவிட்ட மயங்க் யாதவ்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மயங்க் யாதவ் அசைவ உணவை கைவிட்டு விட்டார் என அவரது தாயார் மம்தா யாதவ் தெரிவித்துள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு அசைவ உணவை கைவிட்ட மயங்க் யாதவ்
Published on

பெங்களூரு,

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மணிக்கு அதிகபட்சமாக 156.7 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி மிரட்டிய லக்னோ வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல் உள்பட 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து ஹீரோவாக ஜொலித்தார். அவரது பந்துவீச்சுக்கு பல்வேறு முன்னணி வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, டெல்லியைச் சேர்ந்த 21 வயதான மயங்க் யாதவ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே அசைவ உணவை கைவிட்டு விட்டார் என அவரது தாயார் மம்தா யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இரண்டு ஆண்டுக்கு முன்பே மாமிசம், மீன், முட்டை சாப்பிடுவதை மயங்க் யாதவ் விட்டு விட்டார். இதற்கு அவர் கூறிய காரணம், ஒன்று அவர் தீவிர கிருஷ்ணர் பக்தர். மற்றொன்று தனது உடல்தகுதியை மேம்படுத்துவதற்கு அசைவம் ஒத்து வராது என்று முழுமையாக அதை விட்டு விட்டார்" என்று தெரிவித்தார்.

மேலும் உடல்தகுதிக்காக மயங்க் யாதவ் ஸ்பெஷலாக எந்த உணவையும் எடுத்துக் கொள்வதில்லை என்றும், வழக்கமான பருப்பு, ரொட்டி, சாதம், பால் மற்றும் காய்கறிகளையே சாப்பிடுவதாகவும் அவரது தாயார் மம்தா யாதவ் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com