

லண்டன்,
2026 டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து மெக்கல்லத்தை நீக்க வேண்டும் என விமர்சனம் எழுந்தது. ஆனாலும் மெக்கல்லம் தனது பதவியில் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அதில், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நான் தொடர விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் சில அருமையான விஷயங்களைச் சாதித்துள்ளோம், இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என கூறினார்.
இந்நிலையில் 125% பிரெண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புருக் தெரிவித்துள்ளார்.