மெக்முல்லன் அரைசதம்.. ஆஸ்திரேலியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து தரப்பில் பிரண்டன் மெக்முல்லன் அரைசதம் அடித்து அசத்தினார்.
மெக்முல்லன் அரைசதம்.. ஆஸ்திரேலியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஸ்காட்லாந்து
Published on

எடின்பர்க்,

ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணிக்கு பிரண்டன் மெக்முல்லன் தவிர மற்ற வீரர்கள் பெரிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய பிரண்டன் மெக்முல்லன் 56 ரன்கள் அடித்து அசத்தினார். மற்ற வீரர்களில் ஜார்ஜ் முன்சி 25 ரன்கள் அடித்தார்.

இதன் மூலம் ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் அடித்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com