சாம்பியன்ஸ் கோப்பை அட்டவணையை இறுதி செய்ய 29-ந் தேதி ஆலோசனை

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கிறது.
Image Courtesy: ICC
Image Courtesy: ICC
Published on

துபாய்,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் எந்த போட்டியிலும் விளையாடாத இந்திய கிரிக்கெட் அணி இந்த போட்டிக்கும் செல்ல மறுத்து விட்டது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால் இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை. தங்கள் நாட்டில் தான் போட்டி முழுமையாக நடத்தப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

இந்த சிக்கலால் போட்டி அட்டவணையை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு போட்டி அட்டவணையை இறுதி செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டியின் ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக வருகிற 29-ந் தேதி நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com