யு19 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய வீரர்கள்; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

யு19 உலகக்கோப்பையை இந்தியா 5வது முறையாக வென்றது.
யு19 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய வீரர்கள்; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
Published on

மும்பை,

16வது யு19 உலகக்கோப்பை ஜிம்பாப்வேயில் நடைபெற்றது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் யு19 உலகக்கோப்பையை இந்தியா 5வது முறையாக வென்றது.

இந்நிலையில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி இன்று நாடு திரும்பியது.

மராட்டிய மாநிலம் மும்பை விமான நிலையம் வந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையம் முன் திரண்ட கிரிக்கெட் ரசிகர்கள் உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com