

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக் ஹஸ்ஸி, அந்த அணியின் பயிற்சிக் குழுவில் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுள்ளார். 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆஷஸ் தொடர் மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான ஆலோசனைப் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் டி20 ஆலோசகராகவும் செயல்பட உள்ளார். இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக எட்டு ஆண்டுகள் பணியாற்றிய ஹஸ்ஸி, இந்த ஆண்டு அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் தனது புதிய பணியைத் தொடங்க உள்ளார். தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பிலும் அணிக்கு உதவுவார். வீரர்களைக் கண்டறிதல், எதிரணி பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்தல், போட்டிக்கான வியூகங்களை வகுத்தல் உள்ளிட்ட பொறுப்புகளையும் அவர் கவனிக்க உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டும் ஹஸ்ஸியின் அனுபவம் அணிக்கு பெரிதும் உதவும் என்று தெரிவித்துள்ளார்