மில்லர் அதிரடி... இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.
மில்லர் அதிரடி... இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
Published on

அகமதாபாத்,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் நடந்த ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான டி காக் (4), கேப்டன் மார்க்ரன் (6), ரிக்கல்டன் (7) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து மில்லர் - பிரெவிஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

பிரெவிஸ் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது. அரைசதம் கடந்த மில்லர், 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஸ்டப்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டப்ஸ் 44 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com