சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் செல்போன் கொண்டு வரலாம்: சிஎஸ்கே அறிவிப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் செல்போன் கொண்டு வரலாம் என்று சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அறிவித்து உள்ளது. #CSKvsKKR #IPL
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் செல்போன் கொண்டு வரலாம்: சிஎஸ்கே அறிவிப்பு
Published on

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கிறது. தினமும் சாலை மறியல், ரெயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன. பல அமைப்புகள் போட்டியை காண ரசிகர்கள் நேரில் செல்லக்கூடாது என தெரிவித்துள்ளன. இந்தநிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டன.

பல்வேறு தரப்பில் இருந்தும் வரும் கடும் எதிர்ப்புகளால் இந்த போட்டியை காணவரும் ரசிகர்கள் பலவித சோதனைகளுக்கு பின்பே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. போட்டியைக் காண வரும் ரசிகர்கள், செல்போன் உட்பட எந்த விதமான மின்னணு உபகரணங்களும் கொண்டு வர அனுமதி கிடையாது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், போட்டியைக்காண வரும் ரசிகர்கள் செல்போன்கள் கொண்டு வர அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com