மிட்செல் சான்ட்னரை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்

நியூசிலாந்தின் தவறான பந்துவீச்சே இந்தியா உலகக் கோப்பையை வெல்ல காரணம் என்று அவர் கூறினார்.
மிட்செல் சான்ட்னரை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்
Published on

ஆமதாபாத்,

டி20 உலகக் கோபை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் எடுத்த முடிவுகளை பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் கடுமையாக விமர்சித்துள்ளார். நியூசிலாந்தின் தவறான பந்துவீச்சே இந்தியா உலகக்கோப்பையை வெல்ல காரணம் என்று அவர் கூறினார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 255 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. மேலும் தொடர்ந்து இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும் வரலாறு படைத்தது.

Also Read
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 131 கோடி பரிசுத்தொகை; பிசிசிஐ அறிவிப்பு
மிட்செல் சான்ட்னரை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்

இப்போட்டிக்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர், “நியூசிலாந்து பயன்படுத்திய தந்திரம் எனக்கு புரியவில்லை. முதலில் ஹென்றி பந்துவீசினார், பின்னர் ஆப்-ஸ்பின்னரை கொண்டு வந்தார்கள், அதன் பிறகு மீண்டும் ஹென்றியை பந்துவீச வைத்தார்கள். இரண்டு ஓவர்களில் ஹென்றி 12 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். ஆனாலும் திடீரென முழு திட்டத்தையே மாற்றிவிட்டார்கள். அபிஷேக் சர்மா ஸ்பின் பந்துகளுக்கு எதிராக சிரமப்படுவார் என்று தெரிந்திருந்தும், ஏன் ஜேக்கப் டபியை கொண்டு வந்தார்கள்?””

2004-05 முதல் நியூசிலாந்து அணியை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஆனால் அவர்கள் இவ்வளவு அழுத்தத்தில் இருந்ததை இதற்கு முன் பார்த்ததில்லை. அது காரணம் ரசிகர்கள் கூட்டமாக இருக்கலாம் அல்லது இது இறுதிப்போட்டி என்பதாலோ இருக்கலாம். அபிஷேக் சர்மா கூட இளம் வீரர் தான். இந்த தொடரில் பெரிதாக சாதிக்கவில்லை. அவருக்கும் அழுத்தம் இருந்திருக்கும். ஆனால் இத்தகைய போட்டிகளில் திறமை மட்டுமல்ல, மனவலிமையும் முக்கியம். அந்த மனவலிமையை இந்திய அணி காட்டியது. அதனால்தான் அவர்கள் இறுதியில் வெற்றி பெற்றார்கள்,” என்று அமீர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com