இந்திய அணியே இவரை நம்பித்தான் உள்ளது: பாகிஸ்தான் வீரர்

இந்திய அணியே வீராட் கோலியை நம்பித்தான் உள்ளது என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியே இவரை நம்பித்தான் உள்ளது: பாகிஸ்தான் வீரர்
Published on


பாகிஸ்தான் பந்து வீச்சாளர் அமீர் கூறுகையில், கோலியை ஆட்டமிழக்க செய்தால் 50 சதவிகிதம் வெற்றி பெற்றுவிடலாம் என பந்து வீச்சாளர்களுக்கு தெரியும். அதேபோல அவர் களத்தில் இருக்கும்வரை இந்திய கிரிக்கெட் அணி எவ்வளவு பெரிய இலக்கையும் 70- 80 சதவிகிதம் வெல்லும்.

அதுவும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி என்றால் பரபரப்பு அதிகமாகும் என தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக கோலி, தான் சந்தித்த பந்துவீச்சாளர்களில் அமீரே சிறந்தவர் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com