ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அசாருதீன் இடைநீக்கம்

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 58 வயதான முகமது அசாருதீன் இருந்து வருகிறார்.
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அசாருதீன் இடைநீக்கம்
Published on

2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் தலைவராக தேந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சட்டவிதிகளை மீறியதாக ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் உயர்மட்ட குழு அவரை தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது. அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில் 10 ஓவர் கிரிக்கெட்டில் பங்கேற்கும் துபாயைச் சேர்ந்த நார்த்தன் வாரியர்ஸ் என்ற தனியார் கிரிக்கெட் கிளப்பின் ஆலோசகராக நீங்கள் (அசாருதீன்) இருக்கிறீர்கள். இந்த 10 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்கவில்லை. அந்த கிளப்பின் ஆலோசகராக இருப்பதை நீங்கள் எந்தவொரு நேரத்திலும் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கோ, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கோ தகவல் தெரிவித்தது கிடையாது. இரட்டை ஆதாயம் பெறும் வகையிலான பொறுப்பின் மூலம் கிரிக்கெட் வாரிய விதிமுறைகளை மீறியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள அசாருதீன், தனக்கு எதிரான சில உறுப்பினர்களின் பழிவாங்கும் நடவடிக்கை இது என்று சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com