கேகேஆர் ரசிகர்களுக்கு ஷாக்… காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்?

முன்னதாக முஸ்தபிசுர் ரகுமானுக்கு பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங்க் முசரபானி அணியில் சேர்க்கப்பட்டார்.
கேகேஆர் ரசிகர்களுக்கு ஷாக்… காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்?
Published on

கொல்கத்தா,

ஐபிஎல் 2026 தொடருக்கு முன் கொல்கத்தா அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்ஷித் ராணா முழு சீசனிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வார்ம்-அப் ஆட்டத்தின்போது ஏற்பட்ட காயத்திலிருந்து ஹர்ஷித் ராணா இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் ஐபிஎல் 2026 தொடரில் அவர் விளையாட முடியாது என்று கூறப்படுகிறது.

விரைவில் ஹர்ஷித் ராணாவுக்கான மாற்று வீரரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக முஸ்தபிசுர் ரகுமானுக்கு பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங்க் முசரபானி அணியில் சேர்க்கப்பட்டார்.

Also Read
“ஐபிஎல்லில் மிகச் சிறந்த அணிகள் இவைதான்!” - அனில் கும்ப்ளே
கேகேஆர் ரசிகர்களுக்கு ஷாக்… காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்?

2022ஆம் ஆண்டு ஐபிஎலில் அறிமுகமான ஹர்ஷித் ராணா தொடர்ந்து கேகேஆர் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 34 போட்டிகளில் 40 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

குறிப்பாக ஐபிஎல் 2024 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி கோப்பையை வென்றபோது ஹர்ஷித் ராணா முக்கிய பங்காற்றினார். அந்த தொடரில் 13 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதனை கருத்தில் கொண்டு, கொல்கத்தா அணி ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் அவரை ரூ.4 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com