

லண்டன்,
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் (4 ரன்) மிட்செல்ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். மோர்கன் ஆடிய விதத்தை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கிண்டல் செய்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஸ்டார்க்கின் பந்து வீச்சில் மோர்கன் பயப்படுவது போல் தெரிந்தது. இது மோசமான அறிகுறியாகும் என்று குறிப்பட்டிருந்தார். பீட்டர்சன் இன்னொரு டுவிட்டர் பதிவில், மிட்செல் ஸ்டார்க்கின் முதல் பந்தை மோர்கன் ஸ்கொயர் லெக்கில் ஒதுங்கியபடி எதிர்கொண்டு தடுமாறியதை பார்க்கும் போது, அடுத்த வாரத்தில் இங்கிலாந்து கொஞ்சம் சிக்கலை எதிர்கொள்ள நேரிடலாம் என்று என்னை சிந்திக்க வைக்கிறது. அப்படி நடக்காது என்று நம்புகிறேன். ஆனாலும் ஒரு கேப்டன் இத்தகைய பலவீனத்தை காட்டியதை சமீப காலமாக நான் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து மோர்கனிடம் கேட்ட போது, அப்படியா? நான் அப்படி உணரவில்லை என்று கூறியபடி சிரித்தார்.