அதிக சிக்ஸர்கள்: ரோகித் சர்மா புதிய சாதனை


அதிக சிக்ஸர்கள்: ரோகித் சர்மா புதிய சாதனை
x

ரோகித் சர்மா 2 சிக்ஸர்கள் பறக்க விட்டு ஆட்டமிழந்தார்

வதோதரா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.இதில், டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 301 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.தொடக்க வீரர் ரோகித் சர்மா 2 சிக்ஸர்கள் பறக்க விட்டு 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் 2 சிக்ஸர்கள் அடித்ததால் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார் .

சர்வேதச கிரிக்கெட்டில் 650 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

1 More update

Next Story