அதிக விக்கெட்டுகள் - ஸ்டார்க் புதிய சாதனை

இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 31 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
சிட்னி,
ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. அத்துடன் அந்த அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 31 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனால் ஸ்டார்க் புதிய சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத்தின் சாதனையை மிட்செல் ஸ்டார்க் சமன் செய்துள்ளார்.
93 டெஸ்ட் போட்டிகளில் ஹெராத் 433 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில், ஸ்டார்க் 106 டெஸ்ட் போட்டிகளில் 433 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.இவர்களுக்கு அடுத்த இடத்தில வாசிம் அக்ரம் 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
Related Tags :
Next Story






