ஐ.சி.சி.யின் 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைந்த எம்.எஸ் தோனி


ஐ.சி.சி.யின் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைந்த எம்.எஸ் தோனி
x
தினத்தந்தி 9 Jun 2025 10:37 PM IST (Updated: 9 Jun 2025 10:39 PM IST)
t-max-icont-min-icon

ஐ.சி.சி ஹால் ஆப் பேமில் சேர்க்கப்பட்ட 11வது இந்திய வீரர் எம்.எஸ். தோனி ஆவார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது.

அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன், சவுத் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா, கிரேம் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோர் சேர்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் மற்றும் இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகியோரும் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார்கள். ஐ.சி.சி ஹால் ஆப் பேமில் இடம் பெற்ற முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற பெருமையை சனா மிர் பெற்றிருக்கிறார்

இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே , ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்த கவுரவத்தை பெற்றுள்ளநிலையில், எம்.எஸ்.தோனி 11வது இந்திய வீரராக இதில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story