

கொழும்பு,
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி, நேற்றைய இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் தனது 300 வது ஒருநாள் போட்டியை எட்டினார். 300 வது ஒருநாள் போட்டியில் விளையாடிய தோனி 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நேற்றைய போட்டியின் மூலம் தோனி புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்ததில் புதிய சாதனையை தோனி நிகழ்த்தியுள்ளார். 73 இன்னிங்ஸ்களில் தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார்.
தோனிக்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர் பொல்லாக் மற்றும் இலங்கையை சேர்ந்த சமோந்தா வாஸ், ஆகியோர் 72 முறை ஆட்டமிழக்காமல்(நாட் அவுட்) இருந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் மைக்கேல் பெவன் 67 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.