மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்


மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
x

இந்த சீசனில் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆமதாபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் ஆமதாபாத்தில் நடந்த லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சிடம் தோல்வியை தழுவியது. இதில் 197 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 160 ரன்னில் அடங்கியது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. பந்துவீச்சுக்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து கேப்டன் என்ற முறையில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மெதுவாக பந்து வீசிய புகாரில் அடிக்கடி சிக்கிய ஹர்திக் பாண்ட்யா அதனால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த சீசனில் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பந்துவீசுவதற்கு தாமதம் ஆகும் பட்சத்தில் களத்தில் பீல்டிங் கட்டுப்பாடு மற்றும் அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story