மும்பை இந்தியன்ஸ் அதிரடித் தொடக்கம்.. சச்சின் நெகிழ்ச்சிப் பதிவு

2026 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அதிரடித் தொடக்கம்.. சச்சின் நெகிழ்ச்சிப் பதிவு
Published on

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் கொல்கத்தா அணி நிர்ணயித்த 220 ரன்கள் வெற்றி இலக்கை, மும்பை இந்தியன்ஸ் 19.1 ஓவர்களில் விரட்டி பிடித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மா, ரிக்கெல்டன் ஜோடி அதிரடியாக ஆடி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி குறித்து இந்திய அணியில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சச்சின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: ரோகித் சர்மா மற்றும் ரிக்கிள்டன் ஆகியோரின் சிறப்பான தொடக்கம், இமாலய இலக்கை எளிதாகத் துரத்த உதவியது. அதிக ரன்கள் குவிக்கப்பட்ட இந்த போட்டியில் ஷர்துல் தாகூரின் பந்துவீச்சு திருப்திகரமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com