மகளிர் பிரீமியர் லீக்: உ.பி.க்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

டாஸ் வென்ற உத்தரபிரதேச வாரியர்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
மகளிர் பிரீமியர் லீக்: உ.பி.க்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
Published on

மும்பை,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கில் நவி மும்பையில் இன்று நடைபெற்றுவரும் 8வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற உத்தரபிரதேச வாரியர்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக அமன்ஜித் கவுர், கமலினி களமிறங்கினர். கமலினி 5 ரன்களில் அவுட் ஆன நிலையில் அடுத்து வந்த நட் ஷிவர் புர்னெட் பொறுப்பான ஆடத்தை வெளிப்படுத்தினார். அமன்ஜித் கவுர் 38 ரன்களில் அவுட் ஆன நிலையில் புர்னெட் அரைசதம் விளாசினார். புர்னெட் 43 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். இறுதியில் மும்பை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய நிகோலா கேரி 20 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார்.

இதனை தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி.வாரியர்ஸ் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com