டெல்லி அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
டெல்லி அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
Published on

புதுடெல்லி,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழா வில் இன்று (சனிக்கிழமை) இரு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந் தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் மும்பை, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. மும்பை அணியில் சூர்யா குமார் யாதவ், ரோகித் சர்மா ஆகியோர் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். சூர்யா குமார் யாதவ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மேலும் அதிரடியாக விளையாடி ரோகித் சர்மா 35 ரன்கள் எடுத்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com