பெங்களூரு அணிக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணிக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
Published on

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 5 முறை சாம்பிய னான மும்பை இந்தியன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களுரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. மும்பை அணியில் திலக் வர்மா, நமன் திர் இருவரும் சிறப்பாக விளையாடினர். திலக் வர்மா அரைசதம் அடித்து 57 ரன்களும், நமன் திர் 47 ரன்களும் எடுத்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com