முஸ்தபிசுர் ரஹ்மான் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியுடன் ஒப்பந்தம்

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டார்ப் இடத்தை நிரப்ப உள்ளார்.


முஸ்தபிசுர் ரஹ்மான் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியுடன் ஒப்பந்தம்
Published on: 

வங்கதேச அணியின் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், 2026-27-ம் ஆண்டு நடைபெறவுள்ள பிக் பாஷ் லீக் (BBL 16) தொடரில் விளையாட மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மூலம் அவர் முதன்முறையாக பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட உள்ளார்.

முஸ்தபிசுர் ரஹ்மான்

ஏற்கனவே ஷாகிப் அல் ஹசன், ரிஷாத் ஹொசைன் ஆகிய வங்கதேச வீரர்கள் இத்தொடரில் விளையாடியுள்ள நிலையில், தற்போது முஸ்தபிசுரும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். ஐஎல்டி20 தொடரில் தனது ஆட்டத்தை முடித்த பிறகு ரெனிகேட்ஸ் அணியுடன் இணையும் அவர், காயம் காரணமாக விலகியுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டார்ப் இடத்தை நிரப்ப உள்ளார். டி20 கிரிக்கெட்டில் 400-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவம் கொண்ட முஸ்தபிசுர், தனது கட்டர் பந்துகள், மெதுவான பந்துகள் மற்றும் கடைசி ஓவர்களில் துல்லியமாகப் பந்துவீசும் திறன் ஆகியவற்றின் மூலம் ரெனிகேட்ஸ் அணிக்கு வலுசேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் டிசம்பர் 22-ம் தேதி சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X