எனது சிறந்த ஆட்டம் இன்னும் வெளிவரவில்லை... சொல்கிறார் ரஹானே.!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை வீரர் ரஹானே 29 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 71 ரன்கள் குவித்தார்.
எனது சிறந்த ஆட்டம் இன்னும் வெளிவரவில்லை... சொல்கிறார் ரஹானே.!
Published on

கொல்கத்தா,

ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சென்னை வீரர் ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ருத்ர தாண்டவமாடினார். 24 பந்துகளில் அரைசதம் கடந்த ரஹானே சிக்சர்களாக பறக்க விட்டார். 29 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் விளாசிய ரஹானே 71 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தனது இந்த அதிரடி ஆட்டம் குறித்து ரஹானே கூறுகையில், 'இந்த சீசனை நான் உற்சாகத்துடன் அனுபவித்து விளையாடி வருகிறேன். எனது சிறந்த ஆட்டம் இன்னும் வெளிவரவில்லை என்று நினைக்கிறேன்.

டோனி தலைமையின் கீழ் விளையாடுகையில் நிறைய கற்றுக்கொள்ளலாம். அவரது தலைமையில் இந்திய அணியில் விளையாடி இருக்கும் நான் தற்போது முதல்முறையாக சென்னை அணியில் ஆடுகிறேன். அவர் என்ன அறிவுரை சொன்னாலும் கேட்கலாம்'என்றார். ரஹானேவை சென்னை அணி ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com