எப்படி விளையாட வேண்டும் என என் தந்தை எனக்கு சொல்வார்: அபிஷேக் சர்மா நெகிழ்ச்சி

ஐதராபாத் அணி 47 ரன் வித்தி யாசத்தில் 4-வது வெற்றியை பெற்றது.
எப்படி விளையாட வேண்டும் என என் தந்தை எனக்கு சொல்வார்: அபிஷேக் சர்மா நெகிழ்ச்சி
Published on

ஐதராபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணி கள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்செய்தது.

தொடக்கம் முதல் ஐதராபாத் அணி அதிரடியாக விளையாடியது. ஹெட் 37 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் அபிஷேக் சர்மா டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். தொடர்ந்து பவுண்டரி, சிக்ஸர்களை பறக்க விட்டார். அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் 135 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷான் 25 ரன்களும், கிளாசன் 37 ரன்களும் எடுத்தனர். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது.

பின்னர் மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி வீரர்கள் முடிந்த வரை வேகமாக அடித்து ஆடினர். ஆனால் சீரான இடைவெளியில் விக் கெட்டுகளும் விழுந்ததால் முன்னேறி செல்ல முடியவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய டெல்லி அணியால் 9 விக்கெட்டுக்கு 195 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஐதராபாத் அணி 47 ரன் வித்தி யாசத்தில் 4-வது வெற்றியை பெற்றது.

வெற்றி தொடர்பாக பேசிய அபிஷேக் சர்மா கூறியதாவது,

எங்களிடம் ஒரு திட்டம் இருந்தது. நானும் டிராவிஸ் ஹெட்டும் , பவர்பிளேயைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால் விக்கெட் சற்று மெதுவாக இருந்தது . அதனால் நாங்கள் மீண்டும் திட்டமிட வேண்டியிருந்தது, மேலும் இந்த சிறப்பான மைதானத்தில் ரன்கள் எடுப்பது எப்போதுமே ஒரு சிறப்பான தருணமாக இருந்துள்ளது. நான் ரசிகர்களை மகிழ்விக்க விரும்பினேன். அவ்வளவுதான். கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு அவசியம். அது அணிக்கு மிகவும் முக்கியமானது. சன்ரைசர்ஸ் அணி இளம் வீரர்களை வளர்க்க விரும்பினார்கள்.

என் அப்பா எப்போதும் மைதானத்தின் திரைக்கு அருகில்தான் அமர்ந்திருப்பார். ஐதராபாத்திலும் கூட, அவர் எப்போதும் அங்கேதான் அமர்ந்திருப்பார். நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருக்கும்போதெல்லாம், எப்படி விளையாட வேண்டும் என்று அவர் எனக்குச் சொல்வார். அது இப்போதும் தொடர்கிறது. நான் எப்போதும் அவரைப் பார்ப்பதும், அவர் எப்போதும் என்னைப் பார்த்து எனக்கு அறிவுரைகளை வழங்குவதும் உண்மையிலேயே நம்பமுடியாத ஒன்று. அதுவும் எனக்குச் சற்று உதவுகிறது. நிச்சயமாக, பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் விளையாடுவது எப்போதும் ஒரு சிறப்பான அனுபவம்தான். என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com