பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக நஜம் சேதி போட்டியின்றி தேர்வு

பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய தலைவராக நஜம் சேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக நஜம் சேதி போட்டியின்றி தேர்வு
Published on

பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய தலைவராக பதவி வகித்த சஹாரியார் கான் தனது பதவி காலம் முடிவடைந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களை கருத்தில் கொண்டு பதவி விலகினார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் கடந்த மாதம் சேதியை வாரிய உறுப்பனராக நியமனம் செய்தார். அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அவர் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது.

எனினும் சேதியின் வாரிய உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வாரியத்தில் உள்ள 10 உறுப்பினர்களில் ஒருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. அதற்கு மாறாக, 10 பேரும் சேதி தலைவராவதற்கு வாக்களித்தனர்.

இந்த நிலையில், 10 உறுப்பினர்கள் அடங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நஜம் சேதியை வாரிய தலைவராக இன்று தேர்வு செய்தனர். அவர் 3 வருடம் இந்த பதவியில் நீடித்திடுவார்.

அந்நாட்டில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளுக்கான பி.எஸ்.எல். (பாகிஸ்தான் சூப்பர் லீக்) தலைவராகவும் பதவி வகிக்கும் சேதி 3வது முறையாக வாரியத்தின் தலைவராக பதவி ஏற்க இருக்கிறார்.

இதற்கு முன் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் முதல் 2014 ஜனவரி வரை மற்றும் 2014 பிப்ரவரி முதல் 2014 மே வரை வாரிய தலைவராக இருந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com