ஐ.பி.எல்.: சிஎஸ்கே பயிற்சி முகாமில் நடராஜன்.. சென்னை அணியில் இணைய உள்ளாரா..?


ஐ.பி.எல்.: சிஎஸ்கே பயிற்சி முகாமில் நடராஜன்.. சென்னை அணியில் இணைய உள்ளாரா..?
x

image courtesy:PTI

தினத்தந்தி 2 Aug 2025 2:03 PM IST (Updated: 2 Aug 2025 2:05 PM IST)
t-max-icont-min-icon

நடராஜன் இந்த வருட ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.

சென்னை,

ஐ.பி.எல்.தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன.

ஒவ்வொரு அணி நிர்வாகமும் அடுத்த சீசனுக்காக தங்களது அணிகளை தற்போதே தயார்படுத்தும் வேளையில் இறங்கி உள்ளன. ஏற்கனவே ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. மற்ற அணிகளும் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களின் மாற்றங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்பட்டன.

அந்த வரிசையில் தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் இணைந்துள்ளார். இந்த வருட ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த அவர் 2 போட்டிகளிலும் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்றார். ரூ.10.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டாலும் அவர் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே களமிறக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இறுதி கட்டத்தில் துல்லியமாக 'யார்க்கர்' வீசும் திறன் கொண்ட நடராஜன் இந்திய அணியிலும் விளையாடி உள்ளார்.

இந்நிலையில் நடராஜன் தற்போது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதிலும் சென்னை அணியின் டீ-ஷர்ட்டையும் அவர் அணிந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலானது. இது ஐ.பி.எல். ரசிகர்கள் மத்தியில் ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை அடுத்த சீசனுக்கு முன்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து விலகி அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைய உள்ளாரா? அல்லது சிஎஸ்கே அவரை டிரேடிங் முறையில் வாங்க உள்ளதா? இல்லையெனில் வேறு எதுவும் காரணமா? என்று சமூக வலைதளத்தில் கேள்விகள் எழும்பியுள்ளன. இது அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

1 More update

Next Story