கிரிக்கெட் போட்டியில் 14 வயது மாணவன் அவுட் இன்றி 1045 ரன்கள் எடுத்து சாதனை

14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் அவுட் இல்லாமல் மாணவன் ஒருவன் 1045 ரன்கள் எடுத்து சாதனை புரிந்து உள்ளார். #TanishqGavate #cricketnews
கிரிக்கெட் போட்டியில் 14 வயது மாணவன் அவுட் இன்றி 1045 ரன்கள் எடுத்து சாதனை
Published on

மும்பை

நேற்று மும்பையில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் 14 மாணவன் தானிஷ்க் குவாட் அவுட் இல்லாமல் 1045 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார். மாணவன் தானிஷ்க் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் விளையாடி உள்ளார்.

இந்த போட்டியின் அரை இறுதி ஆட்டம் கொபர்கரேன்னில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் ஆங்கிலம் நடுநிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது என பயிற்சியாளர் மணீஷ் கூறினார். லெக்சைடு எல்லைக்கோடு 60-65 யார்டு இருந்தது. ஆப் சைடு எல்லைக்கோடு 50 யார்டு இருந்தது. 149 பவுண்ட்ரிகளும் 67 சிக்சர்களும் அடித்து உள்ளார். தானிஷ்க் யஷ்வந்த்ராவ் சவான் அணிகாக விளையாடி உள்ளார். இத்தகவலை பயிற்சியாளர் மணீஷ் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com