ஐபிஎல் கோப்பையை வெல்ல பந்து வீச்சு சிறப்பாக இருக்க வேண்டும்; பெங்களூரு கேப்டன்

ஐபிஎல் இறுதிப்போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
ஐபிஎல் கோப்பையை வெல்ல பந்து வீச்சு சிறப்பாக இருக்க வேண்டும்; பெங்களூரு கேப்டன்
Published on

அகமதாபாத்,

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் இறுதிப்போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோத உள்ளன. இறுதிப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இறுதிப்போட்டி

இந்நிலையில், ஐபிஎல் கோப்பையை வெல்ல பந்து வீச்சு சிறப்பாக இருக்க வேண்டுமென பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஐபிஎல் தொடரை வெல்லவேண்டுமானால் உங்களிடம் சிறப்பான பந்து வீச்சு இருக்க வேண்டும். விக்கெட்டுகளை வீழ்த்துவது மிகவும் முக்கியம் ஏனென்றால் அகமதாபாத் மைதானத்தில் 200 முதல் 220 ரன்களை சுலபமாக அடித்து விடலாம். ஆனால், 200 முதல் 220 ரன்களுக்குள் ஒரு அணியை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆகையால் கோப்பையை வெல்ல உங்கள் அணியிடம் சிறந்த பந்து வீச்சு இருக்க வேண்டும்’ என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com