பேச்சுவார்த்தையில் உடன்பாடு: கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடைபெறும்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணமாக கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடைபெறும்
Published on

சிட்னி,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைநகரான பிரிஸ்பேனில் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக பிரிஸ்பேனில் தங்கும் இந்திய அணியினருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் இந்திய அணி பிரிஸ்பேன் சென்று விளையாட தயக்கம் காட்டியது. இதனால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்தது. இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி நேற்று தெரிவித்துள்ளார்.

இந்த போட்டிக்காக சிட்னியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி இன்று பிரிஸ்பேன் புறப்பட்டு செல்கிறது. வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளித்து இந்த போட்டி நடைபெறும் என்றும் 50 சதவீதம் அளவுக்கு தான் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை காண வரும் ரசிகர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com