ஓய்வு முடிவை அறிவித்த நெதர்லாந்து அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்

நெதர்லாந்தின் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Image Instagrammed By stephanmyburgh
Image Instagrammed By stephanmyburgh
Published on

அடிலெய்டு,

நெதர்லாந்தின் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீபன் மைபர்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் பிறந்த மைபர்க் (38 வயது) நெதர்லாந்து அணிக்காக 45 டி20 போட்டிகளிலும் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை தொடரின் நேற்று நடந்த சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பை உடைத்தனர். இதன் மூலம் 2024 டி20 உலகக் கோப்பைக்கு நெதர்லாந்து அணி நேரடியாக தகுதி பெற்றது.

நேற்று நடந்த போட்டியில் இவர் 37 ரன்கள் எடுத்த மைபர்க் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில் தான் ஸ்டீபன் மைபர்க் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான வெற்றியுடன் எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என கனவிலும் நான் கற்பனை செய்திருக்க மாட்டேன். எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு நான் நெதர்லாந்து நாட்டிற்கும் , நெதர்லாந்து கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com