2028 டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு புதிய கேப்டன்: ரவி சாஸ்திரி தகவல்

சூர்யகுமார் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பொறுத்தது.
2028 டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு புதிய கேப்டன்: ரவி சாஸ்திரி தகவல்
Published on

மும்பை,

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, ஐ.சி.சி. இணைய தளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில். 'இந்தியா, அடுத்த (2028) டி20 உலகக் கோப்பைக்கு புதிய கேப்டனை தேடக்கூடும். இது சூர்யகுமார் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பொறுத்தது. ஆனால் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் ராயல்சுக்கு முன்பு கேப்டனாக இருந்ததால், ஒரு தலைமை பதவிக்கான தனது பெயரை முன்வைத்துள்ளார்.

அவர் அணியில் நிச்சயம் இடம் பெறுபவர், அவர் டாப் ஆர்டரில் அதிரடியான பேட்ஸ்மேன். எனவே, இதை சஞ்சுவிட மிருந்து அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நீங்கள் காண்ப தற்கு ஒரு தொடக்கமாகவே நான் பார்க்கிறேன். இந்த சீசனில் அவர் ஆடிய விதம், டி20 உலகக் கோப்பையில் பெரிய ஆட்டங்களில் தனி யாளாக இந்தியாவை வெற்றி பெற வைத்த விதம், அவரது செயல்பாடு, மற்றும் ஐ.பி.எல்.-ல் இப்போது அவர் காட்டும் முதிர்ச்சி ஆகியவை வருங்கால தலைமைப் பொறுப்பிற்கு அவரை ஒரு உறுதியான தேர்வா கக் காட்டுகிறது' என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com