

சென்னை,
எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள கே.எம்.கே ஸ்டாண்டில் புதிதாக ஸ்ரீராமன் அரங்கம் நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பி. அசோக் சிகாமணி புதிய அரங்கை திறந்து வைத்தார். முன்னாள் தலைவர் ரூபா குருநாத், சென்னை சூப்பர் கிங்ஸ் சி.இ.ஓ கே.எஸ். விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.
மேலும் சிறப்பிடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த தேசிய தேர்வுக் குழு உறுப்பினர் எஸ். சரத், ஐ.சி.சி முன்னாள் நடுவர் எஸ்.ரவி, வளரும் ஐ.சி.சி நடுவர் மதனகோபால், ஐ.சி.சி பேனல் நடுவர் என்.ஜனனி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். சங்கச் செயலர் ஆர்.ஐ.பழனி, துணைச் செயலர் ஆர்.என். பாபா ஆகியோர் பங்கேற்றனர்.