பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து கேப்டன் விலகல்


பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து கேப்டன் விலகல்
x

image courtesy: ICC

இவருக்கு பதிலாக ஹென்றி நிக்கோல்ஸ் மாற்றுவீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெலிங்டன்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கனக்கில் கைப்பற்றி விட்டது.

அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதலாவது ஆட்டம் வருகிற 29-ந் தேதி நேப்பியரில் நடக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி டாம் லாதம் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடரிலிருந்து காயம் காரணமாக கேப்டன் டாம் லாதம் விலகியுள்ளார். பயிற்சியின்போது வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து கேப்டன் பொறுப்பு மைகேல் பிரேஸ்வெல்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மாற்று வீரராக ஹென்றி நிக்கோல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி விவரம் பின்வருமாறு:- மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), முகமது அப்பாஸ், ஆதி அசோக், ஹென்றி நிக்கோல்ஸ், மார்க் சாப்மேன், ஜேக்கப் டபி, மிட்ச் ஹே, நிக் கெல்லி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், பென் சியர்ஸ், நாதன் சுமித், வில் யங்.


1 More update

Next Story