நியூசிலாந்து: கிரிக்கெட் வீராங்கனை லாரன் டவுன் 30 வயதில் ஓய்வு அறிவிப்பு

கடைசியாக 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.
நியூசிலாந்து:  கிரிக்கெட் வீராங்கனை லாரன் டவுன் 30 வயதில் ஓய்வு அறிவிப்பு
Published on

வெலிங்டன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வலதுகை பேட்டிங் செய்யும் வீராங்கனையான லாரன் டவுன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

முதன்முறையாக 2018-ம் ஆண்டு மார்ச் 4-ந்தேதி லிங்கன் நகரில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டில் முதலில் ஆட தொடங்கினார். 2020-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி வெலிங்டனில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியை விளையாடினார்.

Also Read
பஞ்சாப்: கோர்ட்டு, அரசு கட்டிடங்களுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் தீவிர சோதனை
நியூசிலாந்து:  கிரிக்கெட் வீராங்கனை லாரன் டவுன் 30 வயதில் ஓய்வு அறிவிப்பு

கடைசியாக 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இதேபோன்று, 2022-ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி குயின்ஸ்டவுன் நகரில் வங்காளதேசத்திற்கு எதிராக சர்வதேச டி20 போட்டியை விளையாடினார்.

இந்நிலையில், 30 வயதில் அவர் ஓய்வு முடிவை வெளியிட்டு உள்ளார். என்னுடைய நாட்டுக்காக விளையாடிய சந்தர்ப்பம் கிடைத்ததற்காக நான் நன்றி கடன்பட்டுள்ளேன் என அவர் தெரிவித்து உள்ளார். இது அவருடைய ரசிக, ரசிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com