டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

Image Courtesy: @ICC / @BLACKCAPS
டி20 உலகக் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியை மிட்செல் சான்ட்னர் கேப்டனாக வழிநடத்துவார்.
சென்னை,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை சுழல் பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் கேப்டனாக வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி:
* மிட்செல் சான்ட்னர் (கேப்டன்)
* பின் ஆலன்
* மைக்கேல் பிரேஸ்வெல்
* மார்க் சாப்மேன்
* டெவோன் கான்வே
* ஜேக்கப் டபி
* லாக்கி பெர்குசன்
* மேட் ஹென்றி
* ஆடம் மில்னே
* டேரில் மிட்செல்
* ஜிம்மி நீஷம்
* கிளென் பிலிப்ஸ்
* ரச்சின் ரவீந்திரா
* டிம் சீபர்ட் (விக்கெட் கீப்பர்)
* இஷ் சோதி






