நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே-க்கு கொரோனா பாதிப்பு உறுதி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் கான்வே விளையாடி இருந்தார்.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

நாட்டிங்காம்,

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் 23-ம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் கான்வே விளையாடி இருந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல், பிசியோ விஜய் வல்லப் மற்றும் பயிற்சியாளர் கிறிஸ் டொனால்ட்சன் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அணியின் மற்ற வீரர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவில் "நெகடிவ்" முடிவு வந்துள்ளதால் அடுத்த டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் பாதிப்பு இருக்காது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com