ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்
x

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா - ஆஸ்திரேலியா அரைஇறுதி ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

துபாய்,

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றிருந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதின. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன.

லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து இந்தியா , நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் நாளை நடைபெற உள்ள முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார். அதன்படி தற்போதைய சூழலில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் அப்படியே மாற்றமின்றி அணியில் தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரவி சாஸ்திரி தேர்வு செய்த பிளேயிங் லெவன் விவரம் பின்வருமாறு:-

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் வருண் சக்ரவர்த்தி

1 More update

Next Story