விராட் கோலிக்குப் பின் சிறந்த பேட்ஸ்மேன் இவர் தான் - இந்திய வீரரை புகழ்ந்த பாக். முன்னாள் வீரர்..!

விராட் கோலிக்குப் பின் அடுத்த சிறந்த பேட்ஸ்மேன் இவர் தான் என இந்திய இளம் வீரரை பாகிஸ்தான் முன்னாள் வீரர் புகழ்ந்துள்ளார்.
Image Courtesy: shubmangill instagram
Image Courtesy: shubmangill instagram
Published on

கராச்சி,

இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்து வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்த தொடரில் ஏப்ரல் 13 அன்று மொஹாலியில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வீரர் சுப்மன் கில் 49 பந்தில் 67 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இந்த ஆட்டத்தில் சுப்மன் கில்லின் அரைசதத்தின் உதவியுடன் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், விராட் கோலிக்கு பிறகு அடுத்த சிறந்த பேட்ஸ்மேனாக சுப்மன் கில் இருப்பார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது,

அவருக்கு (கில்) அதிக திறன் உள்ளது, அவருக்கு அதிக நேரம் உள்ளது. அவர் ஆடும் போது இயற்கையாகவே அழகாக உள்ளது. அவர் கவர் டிரைவ் அடிக்கும் போது அந்த ஷாட்டில் ஒரு வளைவு உள்ளது.

அவருக்கு அடித்து ஆட நிறைய நேரம் உள்ளது. அவர் ஆப் சைட், ஆன் சைட், ஹூக் அல்லது புல் ஷாட் அடித்து ரன்களை சேர்த்தாலும் பரவாயில்லை. அது மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.

விராட் கோலிக்கு பிறகு அடுத்த சிறந்த பேட்ஸ்மேனாக சுப்மன் கில் இருப்பார் என பலர் கணித்துள்ளனர். அவரிடம் ரோகித் சர்மாவை போல் திறமை உள்ளது. மேலும் அவரது குணமும் மிகவும் வலிமையானது. மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் (டெஸ்ட்., ஒருநாள், டி20) அவர் பந்துவீச்சாளர்களை துன்புறுத்துகிறார்.

இளம் வயதில் அவர் பல்வேறு சாதனைகளை ஏற்கனவே படைத்து விட்டார். வானமே எல்லை அவருக்கு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com