சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசுவது குற்றம் - ஷகிப் அல் ஹசன்

சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசுவது குற்றம் என வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசுவது குற்றம் - ஷகிப் அல் ஹசன்
Published on

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் கடைசி ஆட்டத்தில் வங்கதேசம் இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றும் அணீ சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும் என்ற அழுத்தமான நிலையில் இரு அணிகளும் மோதின. இதில் 184 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை 19.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. வங்கதேச அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. இதனால் தொடரில் இருந்து வெளியேறியது.

இலங்கைக்கு எதிராக வங்கதேச அணி 17 ரன்களை எக்ஸ்ட்ராகளாக வழங்கியிருந்தது. இதில் 4 நோ-பால்கள் அடங்கும். முக்கியமாக ஆட்டத்தின் 20-வது ஓவரில் இலங்கை அணிக்கு கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மெஹிதி ஹசன் நோ-பால் வீசினார். இதன் வாயிலாக 3 ரன்களை எளிதாக பெற்று வெற்றியை வசப்படுத்திய இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்ஹசன் கூறும்போது,

ஆட்டத்தின் இறுதியில் நாங்கள் சிறப்பாக பந்துவீசவில்லை. பேட்டிங்கை பொறுத்தவரையில் நாங்கள் கூடுதலாக 10 முதல் 15 ரன்களை எடுத்தோம். மெஹிதி ஹசன் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எந்த ஒரு கேப்டனும் நோ-பால் வீசுவதை விரும்ப மாட்டார்கள். நாங்கள் நிறைய நோ-பால் மற்றும் அகலப்பந்துகளை வீசினோம். இது சிறந்த பந்துவீச்சு அல்ல. சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசுவது குற்றம் ஆகும்.

அதிக அளவிலான நோ-பால் மற்றும் அகலப் பந்துகளை வீசிவிட்டோம். நாங்கள் அழுத்தத்தில் இருந்ததாக நினைக்கிறேன். உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். படிப்படியாக முன்னேற்றம் காண விரும்புகிறோம். இறுதி கட்ட ஓவர்களில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல் பட வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com