இந்திய கிரிக்கெட் வாரியத்தை வழிநடத்த சவுரவ் கங்குலியை விட சிறந்த நபர் இல்லை - வினோத் ராய்

இந்திய கிரிக்கெட் வாரியத்தை வழிநடத்த சவுரவ் கங்குலியை விட சிறந்த நபர் இல்லை என சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய் கூறினார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தை வழிநடத்த சவுரவ் கங்குலியை விட சிறந்த நபர் இல்லை - வினோத் ராய்
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியத்தை வழிநடத்த சவுரவ் கங்குலியை விட சிறந்த நபர் இல்லை என நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய் கூறி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு இன்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமையிலான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணியிடம் பொறுப்பை ஒப்படைத்தது.

நிர்வாகிகள் குழு தலைவர் வினோத்ராய் கூறியதாவது:-

சவுரவ் கங்குலி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தை திறமையாக நிர்வகித்தார். இந்திய கிரிக்கெட் வாரியத்தை வழி நடத்த கங்குலியை விட சிறந்தவர் வேறு யாருமில்லை என்று நான் நினைக்கிறேன்.

பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலி, ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் படேல், அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகியோர் உச்ச கவுன்சிலில் உள்ளனர். முக்கிய நிர்வாகத்தில் இப்போது நான்கு முன்னாள் வீரர்கள் இருப்பதால் இது மிகவும் திருப்திகரமான அனுபவமாக உள்ளது.

அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதே எங்கள் வேலை. அரசியலமைப்பின் படி தேர்தல் முடிந்தது. அரசியலமைப்பின் அனைத்து சிக்கல்களும் கவனிக்கப்பட்டுள்ளன.

நாங்கள் முற்றிலும் வெளிப்படையானவர்கள். 100-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வாரிய கூட்டங்களின் அறிக்கைகள் குழுவின் இணையதளத்தில் கிடைக்கின்றன. லோதா பரிந்துரைகளை நீர்த்துப்போகச் செய்யவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் கிரிக்கெட் சிறப்பாக இருக்கவில்லை. இரண்டு ஐ.பி.எல். நடத்தப்பட்டு உள்ளது. பெண்களின் ஐ.பி.எல். நடத்தப்பட்டு உள்ளது. சிறிய அளவில் இருந்தாலும் போட்டிகள் உயர் தரமானவை.

இழப்பீட்டுத் தொகுப்பு முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அணியின் மூத்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாங்கள் அதை முழுவதுமாக புதுப்பித்தோம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com