புனே, குஜராத் அணிகளின் ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை ஐ.பி.எல். சேர்மன் அறிவிப்பு

புனே, குஜராத் அணிகளின் ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை என ஐ.பி.எல். சேர்மன் அறிவித்துள்ளார். இதனால் இவ்விரு அணிகளும் அடுத்த ஆண்டு விளையாட முடியாது.
புனே, குஜராத் அணிகளின் ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை ஐ.பி.எல். சேர்மன் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஐ.பி.எல். சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவ்விரு அணிகளுக்கு பதிலாக குஜராத் லயன்ஸ், புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் சேர்க்கப்பட்டன. குஜராத், புனே அணிகள் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே (2016 மற்றும் 2017ம் ஆண்டு) ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு வேளை அடுத்த ஆண்டில் 10 அணிகளை சேர்க்க முடிவு செய்தாலும் கூட, புதிதாக இரண்டு அணிகள் ஏலத்தின் மூலமே எடுக்கப்படும். எனவே எந்த வகையிலும் குஜராத், புனே அணிகளின் ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, தடை காலம் முடிந்து அடுத்த ஆண்டு சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பும். அடுத்த ஆண்டில் 8 அணிகள் விளையாடுமா? அல்லது 10 அணிகள் கால் பதிக்குமா? என்பது ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும். மேலும் அடுத்த ஆண்டில் வீரர்களின் ஏலம் பெரிய அளவில் நடைபெற உள்ளன. அணிகள் வீரர்களை தக்க வைத்துக்கொள்ளும் முறை தொடருமா? என்பது குறித்து ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும் இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com