தோனி, கங்குலி இல்லை... நான் பார்த்த சிறந்த கேப்டன் இவர்தான் - யுவராஜ் சிங்

அணி தடுமாற்றமாக செயல்படும்போது பாண்டிங்கைபோல அவர் கேப்டனாக தைரியமாக முன்னின்று வழி நடத்துவார் என்று யுவராஜ் தெரிவித்துள்ளார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இவர் 132 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 2 ஆயிரத்து 750 ரன்களும் குவித்துள்ளார். 2019ம் ஆண்டு யுவராஜ் சிங் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் அனில் கும்ப்ளே தாம் பார்த்த சிறந்த இந்திய கேப்டன் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக அணி தடுமாற்றமாக செயல்படும்போது ரிக்கி பாண்டிங்கை போல கும்ப்ளே கேப்டனாக தைரியமாக முன்னின்று வழி நடத்துவார் என்றும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அனில் கும்ப்ளே கேப்டனாக நியமிக்கப்பட்டார். அனில் கும்ப்ளே சூழ்நிலை மிகவும் கடினமாக இருக்கும்போது பந்தை மற்றவர்களுக்கு கொடுக்காமல் தாமே தைரியமாக எடுக்கும் அணுகுமுறையை கொண்டவர். அதேபோல விக்கெட்டுகள் விழவில்லை என்றாலும் நான் பந்து வீசுகிறேன் என்று அவர் சொல்வார்.

அது போன்ற அணுகுமுறையை கொண்டவர்தான் சிறந்த லீடர் என்று நான் நினைத்தேன். அதனாலேயே ரிக்கி பாண்டிங் போன்ற கேப்டனின் அணுகுமுறையை பற்றி இங்கே நான் பேசுகிறேன். சூழ்நிலை கடினமாக இருக்கும்போது அல்லது சூழ்நிலை எதுவாக இருந்தாலும் பாண்டிங் அணிக்காக பேட்டிங் செய்வதற்கு தயாராக இருப்பார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com