கபில்தேவ் இல்லை.. அவர்தான் 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' - ரவி சாஸ்திரி பாராட்டு


கபில்தேவ் இல்லை.. அவர்தான் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ரவி சாஸ்திரி பாராட்டு
x
தினத்தந்தி 23 Jun 2025 3:33 PM IST (Updated: 23 Jun 2025 4:01 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா -இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

லீட்ஸ்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரது செஞ்சுரியால் முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 100.4 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆலி போப் 106 ரன்களும், ஹாரி புரூக் 99 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து 'சேனா' நாடுகளான தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பும்ரா இதுவரை 150 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. லோகேஷ் ராகுல் (47 ரன்), கேப்டன் சுப்மன் கில் (6 ரன்) களத்தில் நிற்கிறார்கள். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மட்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசி வருகிறார். மற்ற இந்திய பவுலர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரிலும் இந்தியாவின் வெற்றிக்கு பும்ரா மட்டுமே தனி ஆளாக போராடினார்.

இந்நிலையில் இந்தியா கண்டெடுத்த மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றால் அது ஜஸ்பிரித் பும்ராதான் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். மேலும் கபில்தேவுடன்தான் இணைந்து விளையாடி இருந்தாலும் அவரை விட ஜஸ்பிரித் பும்ராவே 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பும்ரா இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் நான் கபில்தேவுடன் விளையாடி உள்ளேன். ஆனால் அவர் வித்தியாசமானவர். அவரை விட பும்ரா மிகச்சிறப்பானவர். ஏனெனில் பும்ராவால் எந்த ஒரு அணிக்கு எதிராகவும், எந்த ஒரு மைதானத்திலும், எந்த ஒரு பார்மேட்டிலும் அசத்த முடியும். இப்படி ஒரு திறன் கொண்ட வீரர் கிடைப்பது அரிது. அந்த வகையில்தான் பும்ரா 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'.

அதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரான மார்க்கம் மார்ஷல் பேட்ஸ்மேன்களின் மனநிலையை புரிந்து கொண்டு பந்து வீசக்கூடியவர். அவரைப் போன்றே பும்ராவிற்கும் அந்த திறமை இருக்கிறது. அதோடு புதுப்பந்தில் வேகத்துடன் ஸ்விங் செய்வதிலும் சரி, பழைய பந்தில் ஸ்விங் செய்வதிலும் சரி பும்ரா தனித்துவமானவர்" என்று கூறினார்.

1 More update

Next Story