"நாம் உருவாக்கியுள்ள பிணைப்பை யாராலும் உடைக்க முடியாது" - தோனிக்கு சுரேஷ் ரெய்னா பிறந்த நாள் வாழ்த்து

பிட்ச்சை பகிர்வது தொடங்கி, கனவுகளை பகிர்வது வரை நாம் உருவாக்கியுள்ள பிணைப்பை யாராலும் உடைக்க முடியாது.
"நாம் உருவாக்கியுள்ள பிணைப்பை யாராலும் உடைக்க முடியாது" - தோனிக்கு சுரேஷ் ரெய்னா பிறந்த நாள் வாழ்த்து
Published on

மும்பை,

கேப்டன் கூல் என்றும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றும் உலகத்தால் போற்றப்படும் மகேந்திர சிங் தோனியின் 42வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரரும், தோனியின் நெருங்கிய நண்பருமான சுரேஷ் ரெய்னா தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெரிய அண்ணா தோனி. பிட்ச்சை பகிர்வது தொடங்கி, கனவுகளை பகிர்வது வரை நாம் உருவாக்கியுள்ள பிணைப்பை யாராலும் உடைக்க முடியாது.

உங்கள் பல, மற்றும் ஒரு நண்பராகவும், தலைவனாகவும் நீங்கள் கொடுத்த பலம் தான் என்னுடைய கலங்கரை விளக்கமாக இருந்துள்ளது. மகிழ்ச்சி, வெற்றி, நல்ல உடல்நலம் கொண்டதாக இந்த ஆண்டும் உங்களுக்கு அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தொடர்ந்து வழிநடத்துக்கள், உங்களது மேஜிக்கை பரப்பிக்கொண்டே இருங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com