ஹர்மன்பிரீத் கவுர் சாதனையை யாரும் தொடமுடியாது: ஜுலான் கோஸ்வாமி


ஹர்மன்பிரீத் கவுர் சாதனையை யாரும் தொடமுடியாது: ஜுலான் கோஸ்வாமி
x

ஹர்மன்பிரீத் கவுர், முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்தார்.

மும்பை,

இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு ஹர்மன்பிரீத் கவுர்,செய்துள்ள சாதனைகள் மகத்தானது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் , ஜுலான் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஹர்மன்பிரீத் கவுர், இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கும், டபிள்யூ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் செய்துள்ள சாதனைகள் மகத்தானது. முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்தார்.

அவரது தலைமையில் மும்பை அணி 2 முறை மகுடம் சூடியுள்ளது. ஒரு கேப்டனாக அவரது சாதனையை யாராலும் நெருங்க முடியாது. மேலும் பல பட்டங்களை அவர் வென்று தருவார். ஹர்மன்பிரீத் கவுரால் இன்னும் 4-5 ஆண்டுகள் விளையாட முடியுமென நம்புகிறேன் என தெரிவித்தார்.

1 More update

Next Story